பெண் சிங்கங்களின் வேட்டையில் நியூசிலாந்து மண்ணைக் கவ்வியுள்ளது! தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், 20 வயதேயான இளம் வீராங்கனை கெய்லா ரெனெகெனே (Kayla Reyneke) செய்த மேஜிக் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

269 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, கடைசிப் பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அழுத்தமான அந்தச் சூழலில், தனது அறிமுகப் போட்டியிலேயே சற்றும் பதற்றமின்றி சிக்ஸர் விளாசி கெய்லா அணியை வெற்றிபெறச் செய்தார்.

“>

 

வெறும் 48 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 அறிமுகப் போட்டியிலும், இதேபோல் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த கெய்லா, தற்போது ஒருநாள் போட்டியிலும் அதே சாதனையைத் திரும்பச் செய்து ‘பினிஷிங் குயின்’ ஆக உருவெடுத்துள்ளார். 32 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருது வென்ற இந்த இளம் புயலால், தென் ஆப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.