இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் விராட் கோலி, இன்று மிகவும் நிதானமான மற்றும் முதிர்ச்சியான வீரராகப் பார்க்கப்படுகிறார். ஆனால், 2010-ல் அவர் ஒரு “துறுதுறு” இளைஞனாக இருந்தபோது அளித்த பேட்டி ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பேட்டியில், ஒருமுறை ‘பிளைண்ட் டேட்’ சென்றபோது அந்தப் பெண் அழகாக இல்லை என்பதற்காக வெறும் 5 நிமிடத்தில் அங்கிருந்து ஓடி வந்ததாகக் கோலி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
மேலும், நடிகை ஜெனிலியா டிசோசா மிகவும் ‘க்யூட்’ ஆனவர் என்றும், அவருடன் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும் கூறி அப்போதே ரசிகர்களை அதிர வைத்துள்ளார். மறுபுறம், மார்ச் 28 அன்று பெங்களூருவில் நடந்த SRH அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆர்சிபி (RCB) அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் கிங் கோலி.
Picking up exactly where they left off! ❤️
Defending champions #RCB kick off their #TATAIPL 2026 campaign with a clinical, comprehensive victory over #SRH 👏
Updates ▶️ https://t.co/Eo5z0jh4K4 #KhelBindaas | #RCBvSRH | @RCBTweets pic.twitter.com/q3IAaMP3LK
— IndianPremierLeague (@IPL) March 28, 2026
போட்டி முடிந்ததும் மைதானத்தில் இருந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு அவர் பறக்கும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டது பார்ப்பவர் அனைவரையும் நெகிழச் செய்தது. “அன்று பிளைண்ட் டேட்டில் ஓடிய கோலி, இன்று அனுஷ்காவின் அன்பான கணவராக மாறியிருக்கிறார்” என அவரது மாற்றத்தை ரசிகர்கள் வியப்புடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
