பீகார் மாநிலம் பெகுசராய் ரயில் நிலையத்தில் இன்று ஒரு உயிர் காக்கப்பட்ட விதம், ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகத்தையே பெருமைப்பட வைத்துள்ளது. நடைமேடையில் நின்றிருந்த பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழப் போனார். அந்த வினாடி, அருகில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து நிற்க, அங்கிருந்த ஆர்.பி.எஃப் (RPF) வீரர் ஒருவர் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அந்தப் பெண்ணைச் சட்டென இழுத்துக் காப்பாற்றினார்.
बेगूसराय स्टेशन पर देवदूत बना RPF जवान, चलती ट्रेन के नीचे आने ही वाली थी महिला..RPF जवान ने फरिश्ता बनकर जान बचाई, देखें रोंगटे खड़े कर देने वाला Video#Bihar pic.twitter.com/SFq2Pv2Qzv
— NDTV India (@ndtvindia) February 15, 2026
சரியாக ஒரு நொடி தாமதமாகியிருந்தாலும், அந்தப் பெண் ரயிலுக்கு அடியில் சிக்கி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அந்த ஆர்.பி.எஃப் வீரரின் சமயோசித புத்தியையும், உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த இந்த வீரச் செயலையும் அங்கிருந்த பயணிகள் கைதட்டிப் பாராட்டினர். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்தான் இப்படிப்பட்ட மனிதர்களைப் படைத்திருக்கிறார்” என நெட்டிசன்கள் அந்த வீரரைக் கொண்டாடி வருகின்றனர்.
