பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது. பள்ளிச் சீருடை அணிந்திருந்த தனது சிறுமி என்றும் பாராமல், அந்தத் தாய் செய்த செயல் அநாகரீகத்தின் உச்சம். அந்தச் சிறுமியின் பள்ளிப் பையினுள் பாரமான செங்கற்களைத் திணித்து, அதைச் சுமக்கச் சொல்லி அந்தத் தாய் கட்டாயப்படுத்தியுள்ளார். பாரம் தாங்காமல் அந்தச் சிறுமி நடுரோட்டிலேயே கதறி அழுதபோதும், அந்தத் தாய் இரக்கமின்றி வசைபாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
In Muzaffarpur, Bihar, look at how a mother is torturing/abusing her daughter right in the middle of the road.
pic.twitter.com/8tXNtqesQ3— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 15, 2026
பட்டப்பகலில் ஊர் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, துணிச்சலாக அந்தத் தாய் தனது மகளை அவமானப்படுத்தித் துன்புறுத்தியதுதான் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு தாயே இப்படிச் செய்யும்போது, அந்தக் குழந்தைக்கு யாரிடம் பாதுகாப்பு கிடைக்கும்?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்தத் தாய் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
