பாம்புக்கும் கீரிக்கும் இடையே காலம் காலமாக நடந்து வரும் அந்தப் பகை, இப்போது ஒரு முள்வேலியில் அரங்கேறியுள்ளது. பொதுவாகத் தரையில் நடக்கும் சண்டையில் கூட கீரிதான் ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கும். ஆனால், இந்த வீடியோவில் ஒரு விஷ நாகமான கோப்ரா, கீரியிடமிருந்து தப்பிக்க வழிதேடி விவசாய நிலங்களில் இருக்கும் முள்வேலியின் மீது ஏறியுள்ளது. பாம்புக்குப் பின்னாடியே முள்வேலியில் ஏறிய கீரி, எதற்கும் அஞ்சாமல் பாம்பின் தலைப்பகுதியைப் பிடித்துத் தொங்கியது பார்ப்பவர்களையே அதிர வைக்கிறது.
முள்வேலியில் சிக்கிக் கொண்டதால் பாம்பால் வேகமாக நகரவோ அல்லது கீரியைத் திருப்பித் தாக்கவோ முடியாமல் போனது. இந்தச் சாதகமான நிலையைப் பயன்படுத்திக் கொண்ட கீரி, பாம்பின் தலையைக் கவ்வி இழுத்து மிகவும் கொடூரமாகக் கொன்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். “வீடியோ எடுப்பதற்குப் பதில் அந்தப் பாம்பைக் காப்பாற்றி இருக்கலாம்” என்றும், “ஒவ்வொருவனுக்கும் மேல ஒருத்தன் இருப்பான்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்குப் பலவிதமான கமெண்ட்களைத் தட்டி விடுகின்றனர்.
