ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஏற்கனவே வழங்கப்பட்ட 10 நாட்கள் அவகாசத்தை நினைவுபடுத்திய அவர், இந்த புதிய காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் ராணுவக் கட்டமைப்பு பலவீனமடைந்துவிட்டதாக டிரம்ப் கூறினாலும், அமெரிக்கப் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் போரின் தீவிரம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கு அதன் நட்பு நாடுகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பது டிரம்பிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள், அமெரிக்கா தங்களைக் கலந்தாலோசிக்காமல் போரைத் தொடங்கியதால் இதில் தலையிட முடியாது என மறுத்துவிட்டன.
அமெரிக்காவிற்குள்ளேயே டிரம்பின் தனிச்சயமான முடிவுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கூட்டாளிகளின் ஆதரவு இல்லாமல் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பது டொனால்ட் டிரம்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
