பொதுமக்கள் ரயில்வே கேட்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால், இன்னொரு பயங்கர விபத்துக்கு வழிவகுத்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வரும் வீடியோ ஒன்று, “ஒரு நொடிக்கான தவறு வாழ்க்கையையே அழிக்கக்கூடும்” என்பதை உணர்த்துகிறது. அந்த வீடியோவில், ரயில்வே கேட் அடைக்கப்பட இருக்கிறது. ஆனால், ஒரே காரில் பயணித்த நபர், அவசரமாக கேட்டை தாண்டி தண்டவாளத்தைக் கடக்க முயற்சிக்கிறார்.
இடைப்பட்ட நேரத்தில் கேட் மூடப்பட்டு, அந்த கார் தண்டவாளத்துக்குள் சிக்கிக் கொள்கிறது. அடுத்த சில வினாடிகளில், தண்டவாளத்தில் சிக்கிய அந்த காரை ஓட்டுநர், அதை மீண்டும் நகர்த்த முயற்சிக்கிறார். ஆனால் வெற்றியடையவில்லை. இதற்கிடையே, தூரத்தில் ஒரு அதிவேக ரயில் வருவது காணப்படுகிறது. ரயில் நேராக வந்து காரை முழு வேகத்துடன் மோதி நொறுக்கி வீசுகிறது.
छोटी सी गलती कभी कभी बहुत भारी पड़ सकती है………
वीडियो अंत तक देखें और समझें कि आपको क्यों नियमों का पालन करना चाहिए…… pic.twitter.com/JcizXYLFJu
— Aarzoo (@Aarzoo3007) September 11, 2025
மேலும் மோதலின் தாக்கம் அதிகமாய் இருந்ததால், கார் துண்டு துண்டாக நொறுங்கி, அதன் பாகங்கள் பலவிடங்களில் சிதறிக்கிடக்கின்றன. இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவுடன், “ஒரு சிறிய தவறு சில நேரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். வீடியோவை இறுதிவரை பார்த்து, நீங்கள் ஏன் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்ற வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ளன.
