திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமானதும், கனவுகளோடும் நிறைந்ததுமான ஒரு நாள். பொதுவாக பல மாதங்கள் திட்டமிட்டு, பந்தலுடன், விருந்தோம்பலுடன், உறவினர்களை அழைத்து பிரமாண்டமாக நடைபெறும். ஆனால், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கும் ஒரு திருமண வீடியோ, பாரம்பரிய திருமண விழாக்களின் கட்டுப்பாடுகளை மீறி உணர்வுகளை மையமாக கொண்டுள்ளது.
இந்த வீடியோவில், ஒரு மணமகன் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் நிலையில், மணமகள் சடங்குகளுடன் திருமணம் செய்கிறார். அந்த காட்சிகள் பலரை கண்கலங்க வைத்துள்ளன. அந்த வீடியோவில், மணமகன் ஒரு மருத்துவமனை வார்டில் படுக்கையிலிருக்கிறார். அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் வகையில் பிளாஸ்டர் கட்டப்பட்டுள்ளது. இருந்தபோதும், திருமண சடங்குகளை முற்றிலும் ஒழுங்காக நடத்த அவரின் வருங்கால மனைவி முனைந்தார்.
View this post on Instagram
அந்தப் பெண், பாரம்பரிய சிவப்பு மணமகள் உடை அணிந்து, மணமகனின் படுக்கையைச் சுற்றி ஏழு சுற்றுகள் சுற்றுகிறார். பண்டிட் ஒருவர் திருமண மந்திரங்களை உச்சரிக்க, உறவினர்கள் அந்த தருணங்களை கேமராவில் பதிவு செய்கிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைத் தன் பக்கம் இழுத்துள்ளது. இந்த வீடியோவை @ghoshtampa165 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமான உணர்ச்சிவசப்படுத்தும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
மேலும் “உண்மையான காதல் என்பது சூழ்நிலை ஏதாக இருந்தாலும் ஒருவரோடு நிற்பதே!”
“மருத்துவமனையில் கூட மன உறவின் வலிமை தெளிவாக தெரிகிறது.”
“பந்தல் இல்லை, மேடை இல்லை… ஆனால் இதுவே உண்மையான திருமணம்!”
என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர், “மருத்துவமனை ஒரு திருமண மண்டபமாக மாறியது” என்ற நகைச்சுவை வரிகளைப் பகிர்ந்தாலும், இந்த திருமண நிகழ்வு உறவின் அழகும், காதலின் ஆழமும், வாழ்க்கையை இணைந்து வாழ்வதற்கான உறுதியும் மிக எளிய முறையில் பிரதிபலிக்கிறது எனச் சொல்லலாம்.
