இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒடைசி (Odysse) நிறுவனம் இ2கோ (E2GO) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ.63,650 மட்டுமே. இது முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை பயணிக்க முடியும். மேலும் யுஎஸ்பி சார்ஜிங், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.