தசரா பண்டிகையை முன்னிட்டு, முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, புதிய அரோரா மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.2.20 லட்சம். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மோட்டார்சைக்கிளுக்கு புதியதாக எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்போக்டு ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில், மீட்டியோர் 350 பைக்கில் ‘அரோரா’ (Aurora) என்ற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது அரோரா க்ரீன், அரோரா ப்ளூ மற்றும் அரோரா பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.