ஜப்பானின் ஷின்ஜுகு பகுதியில், பல பெண்களுடன் குடும்பம் நடத்தி வந்த யோஹெய் ஓனோ (39) என்ற நபர், அவரது மனைவி ஹருகா (28) மற்றும் வளர்ப்பு மகள் ரின் (23) ஆகியோருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் மூவரும் இணைந்து, சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஹோட்டலுக்கு வரவழைத்து, அங்கு ரகசிய கேமராக்கள் மூலம் அவர்களின் அந்தரங்கக் காட்சிகளைப் படம் பிடித்துள்ளனர்.

சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, 860-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி, அதன் மூலம் சுமார் ₹2.7 கோடிக்கும் மேல் (50 மில்லியன் யென்) சம்பாதித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்தக் கும்பலின் கொடூர முகம் ஒரு இளம்பெண் தப்பிச் சென்று போலீசில் புகார் அளித்தபோதுதான் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு சிறுமியை இரண்டு மாதங்களாகச் சிறைபிடித்து, அவரது கழுத்தில் நாய் பெல்ட் (Collar) மாட்டி, “நீ ஒரு மிருகம், தப்பி ஓடினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவேன்” என மிரட்டி வந்துள்ளனர்.

“அங்கிள் டக்கரு” என்று தன்னை அழைத்துக்கொண்ட ஓனோ, பெண்களை மூளைச்சலவை செய்து தனது அடிமைகளாக மாற்றி வந்துள்ளார்.

இவர்களிடமிருந்து 37 ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் கைவிலங்குகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இந்தக் கும்பலிடம் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா? என ஜப்பான் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.