ஆக்ராவில் கர்வா சௌத் பண்டிகையின்போது, ஒரு கணவருக்காக அவரது இரு மனைவிகள் ஒன்றாக விரதம் இருந்து, பூஜை செய்து, ஒரே நேரத்தில் விரதத்தை முடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எத்மதவுலா பகுதியைச் சேர்ந்த ராம்பாபு நிஷாத்தின் இரு மனைவிகள், பாரம்பரிய உடையில் அழகாக அலங்கரித்து, சந்திரனுக்கு அர்க்யம் கொடுத்து, கணவருக்கு மாலை அணிவித்து, ஆசி பெற்று, ஒரே நேரத்தில் அவரிடம் தண்ணீர் வாங்கி விரதத்தை முடித்தனர். இந்த அன்பான காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராம்பாபு நிஷாத் இதுகுறித்து பேசுகையில், “எங்கே உண்மையான அன்பு இருக்கிறதோ, அங்கே சண்டைக்கு இடமில்லை” என்று கூறினார். அவரது இரு மனைவிகளும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மூவரும் இணைந்து அமைதியாக வாழ்வதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுதான் உண்மையான காதல்,” “இப்படி ஒரு குடும்பத்தை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு” என்று பலவிதமாக கருத்து தெரிவித்து, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.