மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள தனியார் பழங்குடி உறையில் உள்ள வந்தாசி கல்யாண் ஆசிரமா பள்ளியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 21 வயது முன்னாள் மாணவர் கங்கராம் பதாரா, ஹாஸ்டல் மானிட்டராக இருந்தபோது, 8ஆம் வகுப்பு 12 பசங்களை டாய்லெட்டை சரியாக சுத்தம் செய்யவில்லை என அடித்து தாக்கினார். இது அக்டோபர் 7 அன்று, பிள்ளைகள் புகார் செய்த பிறகு தெரியவந்தது. அடுத்த நாளே காவல் துறையால் கங்கராம் பதாரா கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் காவலில் அனுப்பப்பட்டார்.
இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் கோபமும் அதிர்ச்சியும் அடைந்து அவர்களது பிள்ளைகளை டாய்லெட் சுத்தம் செய்ய ஏன் கட்டாயப்படுத்தினார்கள் என கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் மாணவருக்கு மானிட்டர் அதிகாரம் யார் கொடுத்தது, ஆசிரியர்கள் அல்லது ஹாஸ்டல் ஸ்டாஃப் ஏன் தடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதே வாரத்தில், பால்காரின் வடா தாலுகாவில் உள்ள ஆசிரமா பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு இரு சிறுவர்கள் தற்கொலை செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது,
