தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக தலைமையைக் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

சில கருத்துக்கணிப்புகள் திமுக தனித்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற முடியாது என்றும், கூட்டணி கட்சிகளின் தயவுடன்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன.

இன்னும் சில கணிப்புகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ அமையலாம் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஒருவேளை கூட்டணி ஆட்சி என்ற நிலை உருவானால், குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து திமுக தலைமை இப்போதே ரகசிய ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி போன்றவர்களின் சமீபத்திய பதிவுகள் ஏற்கனவே ஒரு மாற்றத்திற்கான அறிகுறியைக் காட்டியுள்ள நிலையில், திமுக மேலிடம் கூட்டணி கணக்குகளை மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகிறது.