ஐபிஎல் 16வது சீசனில் தோனி கால் மூட்டி வலி காரணமாக அவதிப்பட்டதால் ஐபிஎல் 17வது சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டது. அந்த சீசனை தொடர்ந்து 18-வது சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் தோனியை சிஎஸ்கே தக்கவைக்குமா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் UN CAPPED வீரர் இடத்தில் தோனியை தக்க வைத்தார்கள். இருப்பினும் காலில் ஏற்பட்ட காயத்தால் 18-வது சீசனில் விளையாடும் போதே ஓய்வு அறிவிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால்  முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக விளையாடியதை வைத்து பார்க்கும் போது இந்த சீசனோடு ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்று பலரும் கூறி  வந்தார்கள்.

அடுத்தடுத்த ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன்களான சென்னை  சூப்பர் கிங்ஸை இறுதி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறச் செய்யத் தவறியதால் தோனி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோது அவரது எண்ட்ரி பாயிண்ட் குறிப்பாக ஏராளமான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் ஆட்டத்தை பார்க்க அவருடைய பெற்றோர் மற்றும் மனைவி வந்துள்ளதால்   சேப்பாக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் எம்எஸ் தோனி ஓய்வு அறிவிக்க போகிறாரா ? என சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.