திமுக கட்சியின் மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் தற்போது ஹிந்தி மொழி குறித்து பேசிய ஒரு விஷயம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு திமுகவினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆளுநர் மாளிகையில் ஒலிபரப்பப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் போது திராவிடர் நல்த் திருநாடும் என்ற வார்த்தையை விட்டுவிட்டு பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு மாறாக அதனை சுட்டிக்காட்டி வருபவர்களிடம் வம்புக்கு வருவது எப்படி சரியாகும் என்றார். இந்நிலையில் முன்னதாக துரைமுருகன் ஹிந்தி மொழி குறித்து பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆடத் தெரிந்தவர்கள் தான் கச்சேரிக்கு போகணும். பேசத் தெரிந்தவர்கள்தான் பார்லிமென்ட்க்கு போகணும். பார்லிமென்டில் பேசணும் என்றால் ஒன்று ஹிந்தி தெரியணும் இல்லையெனில் இங்கிலீஷ் தெரியணும். இந்த இரண்டும் தெரியல அப்படினா அங்கு வேடிக்கைதான் பார்க்கணும் என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சர் சொன்ன இந்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.