ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன் அரசுப் பள்ளி சவக்கிடங்காக மாறியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது 288 ஆக உள்ளது. அதோடு 747 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் 56 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் தெற்கு ரயில்வே இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாதவர்களின் புகைப்படங்கள் ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.