துணிக்கடை ஒன்றில் துணிகளைச் சரிபார்த்து ஒரு பெரிய கூடையில் போடும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை தவறி அந்தக் கூடைக்குள் விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி  வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அங்கு துணிகளை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தை கூடைக்குள் விழுந்ததைக் கவனிக்காமல் அதன் மேல் தொடர்ந்து துணிகளைப் போட்டுக் கொண்டே சென்றுள்ளனர். இதனால் துணிகளுக்கு அடியில் சிக்கிய அந்தக் குழந்தை, வெளியே வர முடியாமலும் மூச்சுவிட முடியாமலும் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

“>

 

பெற்றோர்களின் சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோ, பார்ப்பவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.