கணவரிடம் தெரியாமல் ரகசியமாகச் சேமித்து வைத்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் கண்டெடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பச் செலவுகளுக்காக கணவர் கொடுக்கும் பணத்தில் சிறு பகுதியை அவருக்குத் தெரியாமல் ஒரு டப்பாவில் அந்தப் பெண் சேமித்து வந்துள்ளார்.

மேலும் 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, நாடு முழுவதும் பழைய நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. ஆனால், தான் பணத்தை மறைத்து வைத்திருந்த விஷயத்தையே மறந்திருந்த அந்தப் பெண், சமீபத்தில் வீட்டைச் சுத்தம் செய்யும் போது அந்தப் பழைய ரூபாய் நோட்டுகளைக் கண்டெடுத்து அதிர்ச்சியடைந்தார்.

“>

தற்போது செல்லாத நோட்டுகளாக மாறிப்போன அந்தப் பணத்தை அவர் கையில் வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. “கணவருக்குத் தெரியாமல் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் இப்படி வீணாகிவிட்டதே” என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், அந்தப் பெண்ணின் அப்பாவியான இந்தச் செயல் பலரை சிரிக்கவும் வைத்துள்ளது.

இந்நிலையில் சேமிப்பு என்பது அவசியம் என்றாலும், காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களது சேமிப்பைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறியதால் அந்தப் பெண்ணுக்குப் பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், இல்லத்தரசிகள் தங்கள் ரகசியச் சேமிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.