சீனாவின் ஒரு பகுதியில் கடுமையான உடல் துர்நாற்றம் காரணமாக வாலிபர் ஒருவரின் உடற்பயிற்சிக் கூட உறுப்பினர் சந்தா ரத்து செய்யப்பட்டுள்ள விசித்திர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஷி என்ற நபர், கடந்த 2025-ஆம் ஆண்டு மூன்று வருடத்திற்கான முழு உறுப்பினர் கட்டணத்தையும் செலுத்தி ஜிம்மிற்குத் தவறாமல் சென்று வந்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு, அவரதுகடுமையான உடல் துர்நாற்றம் தங்களுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அளித்த புகார்களின் பேரில், ஜிம் நிர்வாகம் அவரது உறுப்பினர் உரிமையை அதிரடியாக ரத்து செய்தது.
மேலும், காலத்திற்கான அவரது உறுப்பினர் கட்டணத்தையும் அவரிடமே திருப்பிக் கொடுத்து வெளியேறக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முடிவை தாங்கள் அவசரமாக எடுக்கவில்லை என்றும், கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் வருமாறும், மூலைகளில் உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்துமாறும் ஷியிடம் பலமுறை அறிவுறுத்தும் புகார்கள் ஓயாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜிம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
சாதாரண மனிதர்களை விட ஷிக்கு அதிகமாக வியர்ப்பதால், அவர் பயன்படுத்திய டிரெட்மில் மற்றும் இயந்திரங்களின் அருகே செல்லவே மற்றவர்கள் பயந்து ஓடியதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், தான் கடின உழைப்பின் மூலம் 45 கிலோ எடையைக் குறைத்து கடந்த 10 ஆண்டுகளாக உடற்பயிற்சியை உயிராக மாற்றி வருவதாகவும், மற்றவர்களுக்கு சிரமம் தராமல் இருக்கவும் எப்போதும் துண்டுகளைக் கொண்டு சென்று இயந்திரங்களைச் சுத்தப்படுத்திய பிறகு தன்னைத் துரத்தியது நியாயமில்லை என்று ஷி வேதனை தெரிவித்தார், இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
