ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி செய்த வேடிக்கையான செயல் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மைதானத்திற்கு வெளியே எல்லைக் கோட்டிற்கு அருகே தனது அணி வீரர்களுக்குத் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை எடுத்துச் செல்லும் பணியில் வைபவ் சூர்யவன்சி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த கேமராக்கள் அவர் பக்கம் திரும்பின.

பொதுவாக இளம் வீரர்கள் கேமரா வெளிச்சத்தை விரும்புவார்கள். ஆனால், வைபவ் சூர்யவன்சி சற்றும் எதிர்பாராத விதமாக, கேமராக்களிடம் இருந்து தப்பிக்கத் தனது கையில் இருந்த துண்டால் முகத்தை வேடிக்கையாக மறைத்துக் கொண்டார். தான் கேமராவில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் செய்த இந்தச் சிறுபிள்ளைத்தனமான முயற்சி, அங்கிருந்த சக வீரர்கள் மற்றும் ரசிகர்களைப் புன்னகைக்க வைத்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by @india_fan_018

ஐபிஎல் போன்ற கடுமையான போட்டி நிறைந்த தொடர்களில், இது போன்ற கலகலப்பான தருணங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைகின்றன. வைபவ் சூர்யவன்சி துண்டால் முகத்தை மறைத்தபடி ஓடிய அந்த ‘கேமியோ’ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவினாலும், ஆட்டத்திற்கு அப்பாற்பட்ட இந்தச் சுவாரசியமான நிகழ்வுதான் அன்றைய நாளின் ஹைலைட் சம்பவமாக  மாறியது.