சிவகங்கை மாவட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், அங்கிருந்து பிரசார வாகனத்தில் காரைக்குடிக்கு சாலை மார்க்கமாகப் புறப்பட்டார்.
மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கிப் பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தபோது, தங்களது தலைவரைக் காண ஆர்வம் கொண்ட தொண்டர்கள் பலர் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு அதன் மீது ஏறித் தொற்ற முயன்றனர்.
நடிகர் விஜய் மதுரைக்கு வரும்போது அவருடைய வாகனத்தை தொண்டர்கள் மறித்த நிலையில் உடனடியாக வெளிய வந்து அனைவருக்கும் கை அசைத்தார். மேலும் இந்த நிலையில் நடிகர் விஜய் ரோடு ஷோவாக வேனில் சென்று கொண்டிருந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்த நிலையில் அவருக்கு பல பரிசுகளை வழங்கி வருகிறார்கள். நடிகர் விஜயின் தலையில் ஏதோ ஒரு மர்ம பொருளை ரசிகர் ஒருவர் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவருடைய பவுன்சர் வேலை கையில் எடுக்கும் போது மர்ம பொருள் பறந்து வர உடனடியாக விஜய் கீழே குனிந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இதற்கிடையில் நடிகர் விஜய் தன்னுடைய வாகனத்தை பின்தொடர வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் தொடர்ந்த அவருடைய வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து விபத்தில் சிக்குவது தொடர்கதையாகிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
#WATCH | காரைக்குடி பரப்புரையில் கூட்டத்தில் இருந்து ரசிகர் வீசிய மர்மப்பொருள் விஜயின் தலையை பதம் பார்த்தது#SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews pic.twitter.com/z8EpSxJtIR
— Sun News (@sunnewstamil) April 10, 2026
