இன்ஸ்டாகிராமில் ஒரு வேடிக்கையான காணொளி வெளியாகியுள்ளது. அதில் ஒரு நபர் சாலை நடுவில் காரை நிறுத்திவிட்டு, பின்னால் நின்ற பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்கிறார். பேருந்து காரில் இடித்ததாகத் தெரிகிறது. எவ்வளவு சமாதானம் செய்தாலும், அந்த நபர் ஓட்டுநருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
திடீரென போலீஸ் வாகனம் வருகிறது. உடனே அந்த நபர் போலீஸாரிடம், பேருந்து தனது காரில் இடித்ததாகக் கூறுகிறார். ஆனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, போலீஸார் காரை உடனடியாக எடுத்துச் செல்லுமாறு எச்சரித்து அனுப்புகின்றனர். இந்தக் காணொளி வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
