இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் அறிவியலைப் பயன்படுத்தி வாட்டர் பாட்டிலை அணுகுண்டு போல வெடிக்கச் செய்கிறார். முதலில் பாட்டிலுக்குள் ஐஸ் கட்டிகளை போட்டுவிட்டு, அதன் உள்ளே தண்ணீர் ஊற்றுகிறார். பின்னர் பாட்டிலை இறுக்கமாக மூடிவைக்கிறார்.
இதனால் ஐஸ் உருகி வாயு வெளியேற முடியாமல், பாட்டில் வெடித்து சிதறுகிறது. ஒருமுறை அல்ல பலமுறை இதை செயலை அந்த நபர் செய்து மகிழ்கிறார். ஆனால் உண்மையில் இது ஒரு ஆபத்தான செயலாகும். இந்த ஆபத்தான காணொளி வைரலாகி, நெட்டிசன்கள் பாதுகாப்பு குறித்து கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
