சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக மக்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஒரு வீடியோ பலரையும் சிரிக்கவும், வியக்கவும் வைத்துள்ளது.

அந்த வீடியோவில் ஒரு நபர் தனது ஐபோன் மற்றும் பணம் திருடு போகாமல் இருக்க, தனது ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் பைகளில் கதவுகளுக்கு வைப்பது போல இரும்புத் தாழ்ப்பாள் வைத்து பூட்டு போட்டுள்ளார்.

விலை உயர்ந்த செல்போனை பைக்குள் வைத்துவிட்டு, வெளியே பூட்டு போடும் இந்த விசித்திரமான செயல் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.

“மேக்சிமம் மந்தன்” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது 13 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Max-manthan (@maximum_manthan)

“>

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இனி யாராலும் திருட முடியாது” என்றும், “யார் சாமி இவன்?” என்றும் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

லாஜிக் ஏதும் இல்லாமல் வெறும் புகழுக்காகச் செய்யப்படும் இதுபோன்ற வீடியோக்கள் ஒருபுறம் எரிச்சலைத் தந்தாலும், மறுபுறம் பலரையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துள்ளது.