19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அதிரடி வீரரும், ஆஸ்திரேலிய நட்சத்திரமுமான மேக்ஸ்வெல், அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருப்பது உறுதியாகியுள்ளது. அவர் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்யவில்லை. மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்கச் சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகளும் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் விலகியது அந்த அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் மொத்தம் 173 வீரர்களைத் தக்கவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.