இந்தியாவில் ஆயுஸ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு இலவச மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. இதனை தொடர்ந்து திரிபுரா மாநிலம் முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலமாக மாநிலத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் உட்பட பணக்காரர்கள் வரை இந்த திட்டம் மூலமாக பயன் அடையலாம். இந்த இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைவரும் அணுகக் கூடிய மற்றும் மலிவு சுகாதார சேவையை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு திரிபுரா மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த திட்டம் முதல்வர் தலைமையில் விரைவில் தொடங்கப்படும்.