இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கட்டண சேவை வழங்குனர்களில் ஒன்றான கூகுள் பே நிறுவனமானது வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களோடு கைகோர்த்து நுகர்வோர் மற்றும் தனி நபர்களுக்கான கடன் சார்ந்த தயாரிப்புகளின் வரம்பை வெளியிடுவதாக கூறியுள்ளது.  இந்த கடன் சேவைகளை வழங்க தொழில்நுட்ப நிறுவனமான DMI  பைனான்ஸ் உடன் இணைந்துள்ளது. ரூபாய் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சிறிய டிக்கெட் கடன்கள் கொடுக்க முடிவே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையை ஏழு நாட்கள் 10 முதல் 12 மாதங்கள் என திருப்பி செலுத்தும் காலத்தையும் நிர்ணயத்துள்ளது. இவ்வாறு பெறப்படும் கடன்களை இஎம்ஐ மூலம் 111 முதல் 15 ஆயிரம் வரை செலுத்தலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் கடனுதவி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது . கூகுள் பேவில் உள்ள க்ரெடிட் லைன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து 20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம். இப்பொழுது ஸ்டேட் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க்  மட்டும் உள்ளது. தகுதி வாய்ந்தவர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.