இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் அனைவருக்கும் ஆயுஸ்மான் பாரத் கார்டு வழங்கப்படுகின்றது. இதனை பயன்படுத்தி பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற முடியும். இந்த திட்டத்தில் பயனடைய ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அதே சமயம் அனைத்து சமூக பொருளாதார ஜாதி பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். இதில் நீங்கள் தகுதி உள்ளவராய் என்பதை சரி பார்ப்பதற்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று அங்குள்ள check your eligibility என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் ரேஷன் கார்டு என் அல்லது ஆதார் எண்ணை பதிவு செய்து உங்களுக்கு அந்த தகுதி இருந்தால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.