மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்   அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட வசதியாக பக்தர்களுக்காக ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.

அதன்படி அயோத்தியில் திறக்கப்படவிருக்கும் ராமர் கோயிலை பார்வையிட 275 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில் பயணம் செய்வோர் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை., சாப்பாடு மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 24 முதல் மார்ச் 24 வரை 5 கோடி மக்களை இலவச தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல பாஜக முடிவு செய்திருக்கிறது. இதற்காக பல பகுதிகளில் இருந்தும் நிதியுதவி வந்து கொண்டிருக்கிறது