தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வித கருத்தும் கூறாமல் கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து மௌனமாக நகர்ந்தார்.
இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்தைச் சூழ்ந்த செய்தியாளர்கள், “விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் சொல்லத் தவிர்த்த ரஜினி, சிரித்த முகத்துடன் கைகூப்பி வணக்கம் வைத்துவிட்டு விறுவிறுவென காரில் ஏறிச் சென்றார். ஏற்கனவே கடந்த மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது, விஜய்யின் வெற்றிக்கு எக்ஸ் (X) தளம் வாயிலாக ரஜினி வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தற்போது விஜய் முறைப்படி பதவியேற்றுள்ள நிலையில், நேரில் கேள்வி கேட்டபோது அவர் மௌனம் காத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
