பாலிவுட் திரையுலகின் க்யூட் ஜோடிகளாக வலம் வந்த நடிகை மௌனி ராய் மற்றும் தொழிலதிபர் சுராஜ் நம்பியார் இடையே விவாகரத்து ஏற்படப்போவதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வருகின்றன.
கடந்த 2022-ல் கோவாவில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எண்ணெய் ஊற்றுவது போல, இந்தத் தம்பதிக்கு மிகவும் நெருக்கமான தோழியான நடிகை திஷா பதானியும் தற்போது சுராஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார்.
மேலும், சுராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மௌனி ராயுடனான திருமணப் புகைப்படங்களை நீக்கியுள்ளதாகக் கூறப்படுவது இந்த விவாகரத்து சர்ச்சையை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
எப்போதும் சமூக வலைதளங்களில் ரொமான்டிக் புகைப்படங்களை தட்டிவிடும் இந்த ஜோடி, திடீரென பிரிந்துவிட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து மௌனி ராயோ அல்லது சுராஜோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
