இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்பைச் சந்தித்தது. ஏரலில் இருந்து திருச்செந்தூர் , திருநெல்வெலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வற்தான சாலைகளை இணைக்கின்ற ஆற்றுப்பாலம், கடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கின்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில் அதனை இன்று ஆய்வு செய்தோம்” என்றார்.

மேலும் “100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பேரூராட்சி பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்ட போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் – வணிகர்கள் ஏரல் நகரில் வெள்ளத்தால் கடைகள் – வீடுகள் – வர்த்தக நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்ததாக எடுத்துக் கூறினர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கடைத்தெருவுக்கு சென்று ஆய்வு செய்தோம். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஏரல் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை இன்று பெற்றுக் கொண்டோம். அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் மீது கழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் – அனைவரின் துயர் துடைக்கும் என்று உறுதியளித்தோம்” என்று கூறினார்.