மும்பையில் கிராஃபோர்டு மார்க்கெட்டில் இருந்து சர்ச்கேட் செல்வதற்காக முத்ரிகா என்ற பெண் டாக்ஸி ஒன்றில் ஏறியுள்ளார். வெறும் 7 நிமிட பயணத்திற்கு டாக்ஸி டிரைவர் 200 ரூபாய் கேட்க, பேரம் பேசி 150 ரூபாய்க்கு அவர் சம்மதித்துள்ளார். ஆனால், பயணம் முடிந்ததும் டிரைவர் மீட்டரைக் காட்டி, “மீட்டரில் 110 ரூபாய் தான் வந்துள்ளது, நான் உங்களிடம் 40 ரூபாய் கூடுதலாக வாங்கிவிட்டேன்; நீங்கள் புதியவர் என்பதால் சொல்கிறேன், அடுத்த முறை எங்கு சென்றாலும் மீட்டரை போடச் சொல்லி பயணிக்கவும், கவனமாக இருங்கள்” என்று கூறி அந்தப் பெண்ணை அதிர வைத்துள்ளார்.

தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இனி ஏமாறாமல் இருக்க அந்த டிரைவர் கொடுத்த ‘நேர்மையான’ அறிவுரை தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் “இதுதான் மும்பை ஸ்டைல் நேர்மை” என கிண்டலாகவும் ஆச்சரியமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.