அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று (நவ. 27) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். “எம்.ஜி.ஆர். பின்னால் அணிவகுத்தவர்களில் நானும் ஒருவன். திமுக – அதிமுகவும் இணைத்துத்தான் பயணித்து வருகின்றன” என்று அவர் தனது அரசியல் பயணத்தை நினைவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு தூய்மையான ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். புதிய மாற்றத்தைக் கொண்டு வர விஜய் முயற்சிக்கிறார். அதனால், அவருடன் கைகோர்த்துப் பயணிக்க உள்ளேன். தமிழ்நாட்டில் மாற்றங்கள் வரவேண்டும்” என்று தவெகவில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கினார். செங்கோட்டையனின் இந்த இணைப்பு, விஜயின் அரசியல் பயணத்திற்கு ஒரு மூத்த நிர்வாகியின் அனுபவத்தைச் சேர்த்துள்ளதுடன், தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
