ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் மேற்கூரையின் மீது ஏறி, அதன் ஓட்டுநர் நடனமாடிய ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி இயங்கிக் கொண்டிருந்த லாரியின் கதவைத் திறந்து மேலே ஏறிய அந்த ஓட்டுநர், ஓடும் வாகனத்தின் மேற்கூரையில் நின்று கொண்டு ஆடத் தொடங்கியுள்ளார்.
சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளின் உயிரைப் பணைய வைக்கும் வகையிலும், தனது சொந்த உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அரங்கேறிய இந்தச் சம்பவம், இணையவாசிகளிடையே பலத்த கண்டனங்களை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் கவனத்தைப் பெறுவதற்காகவும், ரீல்ஸ் மோகத்தினாலும் இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்டுகளில் இளைஞர்களும் ஓட்டுநர்களும் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
ஓடும் லாரியில் ஓட்டுநர் இருக்கையில் ஆள் இல்லாத நிலையில், வாகனம் தானாகச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட இந்த அசாத்தியமான கூத்து, ஒருவேளை கட்டுப்பாட்டை இழந்திருந்தால் மிகப்பெரிய விபத்திற்கு வழிவகுத்திருக்கும். சாலையில் சென்ற பிற பயணிகள் இக்காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்த வீடியோ குறுகிய காலத்தில் லாக்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகியுள்ளது.
பொதுமக்களின் உயிருக்கும் சாலைப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சம்பந்தப்பட்ட லாரியின் பதிவு எண்ணைக் கொண்டு ஓட்டுநரைக் கண்டறிந்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதோடு சட்டப்பூர்வமான தண்டனைகளை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
अलवर में इस ट्रक ड्राइवर ने तो लोगों की साँसे ऊपर नीचे कर दी pic.twitter.com/mFPwViF6jZ
— Hemant Kumar (@hemantkumarnews) August 15, 2026
“>
