கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று நடந்த ஏசியா கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ராய்ப்பூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சிறுவன், “அரே, பாகிஸ்தானுக்கு தினமும் தோற்கத்தான் வேண்டும், எப்ப பார்த்தாலும் தோக்குது. அரே பாகிஸ்தான், ஏதாவது செய்து காட்டு, தூ!” என்று கூறி, மகிழ்ச்சியுடன் மைக்ரோஃபோனை விட்டு நடந்து செல்கிறான்.

இந்தக் காணொளி எக்ஸ் வலைதளத்தில் பதிவாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் இந்த வார்த்தைகளும், குறிப்பாக “தூ” என்று சொல்லி சென்றது பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. நெட்டிசன்கள் இதை வேடிக்கையாக எடுத்து, “மைக் ஆப்ரிடி வாய் என்று நினைத்து தூத்திட்டான்” போன்ற கலகலப்பான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தக் காணொளி இந்திய ரசிகர்களின் உற்சாகத்தையும், சிறுவனின் அப்பாவித்தனமான பேச்சையும் வெளிப்படுத்தி, சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.