தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, 108 இடங்களை அள்ளி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையிலும், தமிழகத்தில் இன்னும் புதிய அரசு அமையாமல் இழுபறி நீடிப்பது ஒட்டுமொத்த மாநிலத்தையும் திகுதிகுவென எரியும் அரசியல் களமாக மாற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு மொத்தம் 113 பேரின் பட்டியலை ஆளுநர் அர்லேகரிடம் கொடுத்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும், “118 பேர் ஆதரவு இருந்தால்தான் உள்ளே விடுவேன்!” என கவர்னர் கறாராகக் கைவிரித்ததும், விசிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு முட்டுக்கொடுக்காமல் பின்வாங்கியதும் விஜய்யின் பதவியேற்புக் கனவுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
இந்த செம கேப்பில், “அதிமுகவும் திமுகவும் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போகின்றன; இதற்கு அச்சாரமாகத்தான் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்” என்ற பகீர் தகவல் காட்டுத்தீயாகப் பரவி தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
இந்தத் திடீர் அரசியல் மாற்றங்களால் தவெக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில், தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை வெடிக்கலாம் என்றும், முக்கிய இடங்களில் பாதுகாப்பைத் துரிதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய உளவுத்துறை தமிழக போலீசாருக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை ஒட்டுமொத்த மாநிலத்தையும் உச்சகட்ட பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
