தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை அள்ளி, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், மெஜாரிட்டி இழுபறியால் ஆட்சி அமைப்பதில் செம சிக்கல் நீடித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் செக்யூரிட்டி விவகாரத்தில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, கிட்டத்தட்ட ஒரு முதலமைச்சருக்கு இணையான 4 விஐபி கான்வாய் வாகனங்கள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு வளையத்துடன் வலம் வந்த விஜய்க்கு, நேற்று திடீரென அந்த கான்வாய் செக்யூரிட்டி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோரோடு தீவிர ஆலோசனையை முடித்துவிட்டு விஜய் தனது நீலாங்கரை வீட்டிற்குப் புறப்படுவதற்கு முன்பே, இந்த 4 கான்வாய் வாகனங்களும் தலைமைச் செயலகம் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன.

“எனக்கு இந்த  போலீஸ் பாதுகாப்பு இப்போதைக்கு வேண்டாம்ப்பா” என்று விஜய்யே தானாக முன்வந்து இந்த கான்வாய் கார்களை திருப்பி அனுப்பியதாக ஒரு தகவல் உலா வர, தற்போது வெறும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்புடன் மட்டுமே அவர் வீடு திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட விவாதங்களை கிளப்பியுள்ளது.