வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே ஏசி-யை சர்வீஸ் செய்வது வழக்கம். அப்படி ஒரு வீட்டில் ஏசி-யை சர்வீஸ் செய்ய வந்த மெக்கானிக், அதன் கவரைத் திறந்தபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்களே உறைந்து போய்விட்டனர். ஏசி-யின் உட்புறம் முழுவதும் குப்பை கூளங்களாகவும், மண் துகள்களாகவும் காட்சியளித்தது. அதற்கெல்லாம் மேலாக, ஏசி-யின் ட்ரெயின் பைப் அருகே ஒரு பெரிய எலி குடும்பமே குடியேறி வீடு கட்டியிருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
इस AC का मालिक कितना लापरवाह आदमी होगा। pic.twitter.com/GAqJc4pfAq
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) April 6, 2026
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சுமார் 2.5 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. ஏசி பொருத்தும் போது சுவரில் போடப்பட்ட ஓட்டையைச் சரியாக அடைக்காததே எலிகள் உள்ளே நுழையக் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இப்படியே ஏசி-யை ஆன் செய்திருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆகி வீடே தீப்பிடித்திருக்கும்” எனப் பலரும் தங்களின் அச்சத்தைப் பகிர்ந்து, ஏசி பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்து வருகின்றனர்.
