இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் உயிரை ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்துவதோடு சில நேரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக நின்று கூட ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாங்கள் எஸ்பி ஆபிஸ் உள்ளே சென்று பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்கப் போகிறோம்.

 

உங்களால் முடிந்தால் எங்களை பிடித்து காட்டுங்கள் என்று கூறி instaவில் வீடியோ பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த வாலிபருக்கு போலீசார் பாடம் புகட்டி உள்ளனர். அந்த வாலிபர் அவ்வாறு பேசி வீடியோ வெளியிட்டதற்காக கை கூப்பி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். வைரலாகி வருகிறது.