சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “தேர்தல் நேரத்தில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் வாக்குகளை விற்காதீர்கள்.
சேலத்தில் இன்று (பிப். 13) நடைபெற்ற மக்கள் சந்திப்புப் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய், ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “எங்கள் ஓட்டை யாராலும் விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு, பதிலுக்கு அவர்கள் காதில் விசிலை ஊதி பெவிலியனுக்கு அனுப்பி வையுங்கள்.
நாங்கள் அரசியலுக்கு வந்திருப்பது எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் அழிப்பதற்காக அல்ல. மாறாக, மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனைச் செலுத்துவதற்காகவே இங்கு வந்துள்ளோம். இந்த ஊழல் ஆட்சியை மக்கள் விரைவில் வீட்டிற்கு அனுப்புவார்கள்” என்று சூளுரைத்தார்.
