தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இன்று சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் அவர் செல்லும் வழியெல்லாம் தொண்டர்கள் வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக நடிகர் விஜய் செல்லும்போது அவரது காரை திடீரென தொடர்கள் மறித்ததால் தன்னுடைய காரை நிறுத்திய விஜய் அதன் பிறகு கிளம்பி சென்றார். இந்நிலையில் திடலுக்கு வந்து தற்போது நடிகர் விஜய் பேச தொடங்கியுள்ளார்.
அவர் பேசியதாவது, விஜயின் முன்பாக உங்களுடைய தேர்தல் கணக்கு பலிக்காது. தமிழ்நாடு தான் என்னுடைய வீடு. என்னுடைய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். விஜய் வீட்டை விட்டு வெளியே வா பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்பவர்களுக்கு என் வீடு எங்க இருக்கு என்று தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு நான் சொல்கிறேன் என் தாய் நாடான தமிழ்நாடு தான் என்னுடைய வீடு.
நம்மை ஏளனமாக பார்க்கும்போது நம்மை தாழ்வாக பார்க்கும்போது நாம் நிரூபிக்க வேண்டும் என்று ஒரு புள்ளி தோன்றும். எந்த நேரத்தில் நம்மை கேலியும் கிண்டலும் செய்கிறார்களோ அங்கிருந்துதான் நம்முடைய பவர் ஸ்டார்ட் ஆகிறது.நீதி கேட்டு வந்திருக்கேன் உங்க கிட்ட ஓட்டு மட்டும் கேட்கவில்லை; நீதிக்கேட்டு வந்திருக்கிறேன் தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான் இந்த விஜய், அது ஒரு தப்பா? நான் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக விட்டுட்டு வந்தேன்; அது ஒரு தப்பா? என்று கூறினார்.
