தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அவசர மனு அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையைத் திட்டமிட்டு குறைக்க முயற்சிகள் நடப்பதாகத் தெரிய வருவதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

​இது தொடர்பாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நேர்மையாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நடப்பதை உறுதி செய்ய அனைத்து மையங்களிலும் போதிய அளவு கேமராக்கள் இருப்பதை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இத்தகைய புகார் கிளம்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.