LIC-ன் புது பீமா ரத்னா திட்டத்தில் பிறந்த 90 நாட்களே ஆன குழந்தை முதல் 55 வயது வரையுள்ள நபர் வரை அனைவரும் இணைந்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து தினமும் ரூ.166, அதாவது மாதம் சுமார் ரூ.5,000 என்ற அளவில் பிரீமியம் தொகை செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூ.50 லட்சம் வரை கிடைக்கும்.

இத்திட்டம் 15, 20 மற்றும் 25 வருடங்களுக்கு பாலிசிகான பீரிமியம் செலுத்தும் வகையில் இருக்கிறது. பிரீமியம் தொகை செலுத்தும் காலத்துக்கு ஏற்றவாறு தொகையும் மாறுகிறது. பிரீமியம் கட்டணத்தினை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடந்தோறும் தனிநபரின் விருப்பங்களை பொருத்து செலுத்திக்கொள்ளலாம்.

அதோடு பீரிமியம் தொகையை முழுமையாக செலுத்தவும் தேவையில்லை. 15 வருட காலத்தை தேர்வு செய்வோர் வெறும் 11 வருடங்களுக்கு மட்டுமே, பிரீமியம் தொகையை செலுத்தவேண்டும். அதே சமயத்தில் 20 வருட காலத்துக்கு 16 ஆண்டுகளும், 25 ஆண்டு காலத்திற்கு 21 வருடங்கள் மட்டுமே பிரீமியங்களை செலுத்த வேண்டும்.