தஞ்சை மாவட்டத்தில் எலுமிச்சை பழம் வரத்து அதிகரிப்பால் இதன் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எலுமிச்சையானது பயிரிடப்பட்டு வருகிறது. எலுமிச்சை என்பது எல்லா காலத்திலும் கிடைக்கும் ஒரு பழம்.

கோடைகாலங்களில் சர்பத் போன்ற குளிர்பானங்கள் அதிக அளவில் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. ஊறுகாய் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இது 200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் வரை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்து தற்போது 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.