அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான (AIIMS) எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள ஏம்ஸ் மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்கள், இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணியின் விவரம்:
பதவி பெயர்: நர்சிங் அதிகாரி (Nursing Officer)
மொத்த காலியிடங்கள்: 3,500
ஊதியம்: மாதம் ₹44,900 முதல் ₹1,42,400 வரை (7ஆம் ஊதியக் குழுவின் அடிப்படையில்)
கல்வித் தகுதி:
தேர்ந்தெடுக்கப்பட நபர், கீழ்கண்ட தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
1. B.Sc Nursing (அல்லது) Post Basic B.Sc Nursing அல்லது B.Sc (Hons.) Nursing ஆகியவற்றில் பாஸ் செய்திருக்க வேண்டும் – அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து.
2. அல்லது, பொதுநல நர்சிங் மற்றும் மிட்வைஃபரி டிப்ளமோ படித்து இருக்க வேண்டும்.
3. அனைத்து விண்ணப்பதாரர்களும், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட செவிலியராக இருக்க வேண்டும்.
4. இவை தவிர, 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் குறைந்தது 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்:
SC/ST – 5 ஆண்டு தளர்வு
OBC – 3 ஆண்டு தளர்வு
PwBD – 10-15 ஆண்டு தளர்வு (வகைப்பட்டு)
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://rrp.aiimsexams.ac.in/
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
புகைப்படம், கையெழுத்து, கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து தயார் வைத்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
PwBD – கட்டணம் இல்லை
SC / ST / EWS – ₹2,400
மற்றோர் – ₹3,000
தேர்வு முறை:
நிலை 1: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT – Preliminary Exam)
நிலை 2: கணினி அடிப்படையிலான முதன்மைத் தேர்வு (Main Exam)
விண்ணப்ப தொடக்க தேதி: 22.07.2025
கடைசி தேதி: 11.08.2025
முதல் நிலை தேர்வு: 14.09.2025
இரண்டாம் நிலை தேர்வு: 27.09.2025
முக்கிய குறிப்பு:
இந்த வேலை வாய்ப்பு நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனமான AIIMS-இல் நிரந்தர பணிக்கு அழைக்கும் அரிய வாய்ப்பாகும். மருத்துவ துறையில் உங்கள் சேவையை நாட்டிற்கு அர்ப்பணிக்க விரும்புவோர் இந்த வாய்ப்பை தவறவிடவேண்டாம்!
கூடுதல் தகவலுக்கு: https://rrp.aiimsexams.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
