மகாராஷ்டிரா மாநில மும்பையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஒரு பத்து வயது சிறுமி தன்னுடைய ஒன்பது வயது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் குழந்தைகள் இருவரிடமும் சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி குழந்தைகள் அவருடன் சென்ற நிலையில் ஒரு தோட்டத்திற்கு அவர்களை அழைத்து சென்றுள்ளார்.

முதலில் சிறுவனுக்கு காசு கொடுத்து கடையில் சென்று சிற்றுண்டி வாங்கி கொள்ளுமாறு கூறி அவர் அங்கிருந்து அனுப்பி வைத்தார். பின்னர் அந்த சிறுமியை ஒரு மரத்திற்கு பின்னால் அழைத்துச் சென்று அவர் சிறுமியின் வாயை போத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி வெளியே சொல்லக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி வேறு யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு உரையாடுவதற்கும் சிறுமி அச்சப்பட்டு மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியுள்ளார். இதனை கவனித்த சிறுமியின் தாய் தன் மகளிடம் மெல்ல மெல்ல விசாரிக்கவே விஷயம் தெரிய வந்தது.

இது பற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த 29 வயதான அணிஸ் ‌ திலாவர் ஹூசைன் பியாடா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.