பாலிவுட் திரையரையுலகின் ஹீரோ ஷாருக்கான் ரோல்ஸ் ராய்ஸ் காலினின் காரில் வலம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு வெள்ளை நிறம் தான் ரொம்ப பிடிக்கும் என்பதால் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காலினின்  காரையும் வெள்ளை நிறத்தில் வாங்கியுள்ளார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ரியூனியன் நிகழ்ச்சிக்கும் இந்த காரில் தான் வந்திருந்தார்.

அம்பானி, அமிதாப்பச்சன் போன்றோர் இந்த காரை வைத்திருந்தாலும் அவர்களை இந்த காரில் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் ஷாருக்கான் விமான நிலையம் செல்வது, வெளியில்  செல்வது என அனைத்துமே இந்த காரை தான் பயன்படுத்துகிறார் .இது குறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 6.95 கோடியிலிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் இதன் ஆன்ரோடு விலை 8 கோடியாம்.