தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஜனனி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரின் இன்ஸ்டா பதிவில், தளபதி விஜயுடன் நடித்தது கனவாக இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் இத்தகைய பேரனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்கும் நன்றி. தளபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எனக்கு கிடைத்தவுடன் அதனை பதிவிடுகிறேன். மிகவும் அழகானவர் திரிஷா என்றும் ஜனனி குறிப்பிட்டுள்ளார்.